Cuddalore, Tamil Nadu - 606104 nallauzhan@gmail.com நம்ம ஊரு நல்லஉணவு
Follow us:
📞8056344835 உங்களுக்கு தேவையானதை அழைத்து கேளுங்கள் – நாங்கள் தயார்!

எங்களை பற்றி (About Us)

. நல்ல உழவன் என்ற உணவுப் பொருட்கள் களஞ்சியம் தொடங்கியதற்கு முக்கிய காரணம்.நமது நாட்டில் அனைத்து உணவு பொருட்களும் ரசாயனம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த பொருள்களுக்கு மட்டுமே அதிக சந்தை வாய்ப்பு உள்ளது.இதன் விளைவாக இன்று நமது உழவர்கள் மற்றும் நுகர்வோர் அனைவரும் நஞ்சு கலந்த உணவை உண்டு நோய் வாய் பட்டு மருத்துவமனை மற்றும் மருந்தக்கதை நோக்கி படை எடுத்துகொண்டு இருக்கின்றார்கள்.. ஆனால் இன்று மரபு முறையில் நஞ்சு இல்லா உணவு பொருட்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் மிக சொற்ப அளவில் தான் இருக்கின்றார்கள். அவர்களின் உணவு பொருள்களுக்கு சந்தை வாய்ப்பு மிக குறைவாக மட்டுமே உள்ளது. இதன் விளைவாக மரபு முறையில் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் மீண்டும் ரசாயன உழவு முறையை நோக்கி செல்கின்ற அவலம் தொடந்து நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அனைத்து நுகர்வோர்களுக்கும் எங்களது (நல்ல உழவன்) அன்பான வேண்டுகோள் முடிந்த வரைக்கும். உங்கள் பகுதிகளில் மரபு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நஞ்சு இல்லாத உணவை வாங்கி உண்டு, நீங்கள் நலமோடு உங்கள் சந்ததிகளுடன் நோய் இல்லா மகிழ்ச்சியான வாழ்கையை வாழ வேண்டும் என்றும் அன்போடு கேட்டு கொள்கிறோம்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் பின்னால் ஒரு நல்ல உழவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி படுத்துகி றீர்கள் என்பதனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மரபு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து உழவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.. நீங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களையும் நல்ல உழவன் கொள்முதல் செய்து அதனை சந்தைப் படுத்தும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்..

உழவுத் தொழிலை காக்க வேண்டும் என்றால் முதலில் உழவர்களை காக்க வேண்டும். உழவர்களை காக்க வேண்டும் என்றால் நாம் அவர்கள் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை நல்ல விலை கொடுத்து வாங்க முன் வரவேண்டும்.

இந்த பூவுலகில் கடவுளுக்கு பிறகு போற்றப்படவேண்டியது நமது இயற்கைத் தாய் மற்றும் மரபு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்ற உழவர்கள். ஏனென்றால் அவர்கள் தான் மண்ணை வளப்படுத்தி, அனைத்து நுகர்வோர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் தங்கள் நிலத்தில் நஞ்சு இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்...

மண் வளமே நமது நலம்..

Read More

எங்கள் சேவைகள் (Our Services)

நல்ல உழவன் என்பது ஒரு உணவுப் பொருட்கள் களஞ்சியம் ஆகும். நமது நோக்கம், மரபு முறையில் விவசாயம் செய்யும் உழவர்களின் பொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும், நுகர்வோர் ஆரோக்கியமான உணவு உண்பதற்கும் வழிவகுப்பதாகும்.

இயற்கை உணவுப் பொருட்கள்

இயற்கை உணவுப் பொருட்கள் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. ரசாயனமில்லா முறையில் விளைந்த நெல்லும் அரிசியும், உடலுக்கு மாபெரும் நன்மை அளிக்கின்றன. பாரம்பரிய மற்றும் உழவர் கூட்டுறவுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறிகள், பசுமை மற்றும் புதுமை கொண்டவை. அதேசமயம், நாட்டு மண்ணில் வளரும் பழங்கள் இயற்கையின் அற்புத அன்பளிப்பு. மேலும், எந்த விதமான ரசாயனங்களும் கலக்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள், உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இப்படிப்பட்ட இயற்கை உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்ப்பது, நம் வாழ்நாளை நீடிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவும்.

Read More

உழவர்களின் பொருட்கள் நேரடி விற்பனை

உழவர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வது,உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் ஒரு முக்கியமான முயற்சியாகும். உழவர்கள் நேரடியாக வழங்கும் உணவுப் பொருட்கள், உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே மதிநடை அகற்றுவதுடன், குறைந்த செலவில் அதிக நன்மைகள் தரும். நேரடி கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம், உழவர்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கிறது, மற்றும் நுகர்வோர் கைக்குச் சேரும் உணவுப் பொருட்கள் புதுமையாகவும், ரசாயனமின்றியும் இருக்கும். இந்த முறையால் பாரம்பரிய விவசாயத்தையும், இயற்கை உணவுகளையும் பாதுகாக்க முடிகிறது, மேலும், உழவர்களின் உழைப்பிற்கு நேரடி ஆதரவு கிடைக்கிறது.

Read More

நுகர்வோர் மையம்

நுகர்வோர் மையம் என்பது ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடமாக செயல்படுகிறது. மனித உடலுக்கு நன்மை தரும் உணவுகளை தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதோடு, ரசாயனமில்லா இயற்கை உணவுகளின் பயன்களை பற்றியும் மக்களுக்குத் தகவல் வழங்குகிறது. மேலும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள், மற்றும் சந்திப்புகள் மூலம், ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பான உணவு பழக்கவழக்கங்களை மக்களில் வளர்க்க உதவுகிறது.

Read More

Our Products

Nallennai
Organic மஞ்சள் தூள்
₹550.00 Total: ₹550.00 1 kg Price
Nallennai
Non Organic மஞ்சள் தூள்
₹400.00 Total: ₹400.00 1 kg Price
Test Product
முழு உளுந்து     
₹120.00 Total: ₹120.00 1 kg Price
Nallennai
Organic வேர்க்கடலை எண்ணெய்
₹250.00 Total: ₹250.00 1 liter Price


Nallennai
கேழ்வரகு மாவு
₹100.00 Total: ₹100.00 1 kg Price
Nallennai
மிளகாய் தூள்
₹400.00 Total: ₹400.00 1 kg Price
Nallennai
கம்பு மாவு
₹100.00 Total: ₹100.00 1 kg Price
Test Product
உடைத்த உளுந்து     
₹110.00 Total: ₹110.00 1 kg Price

ஏன் நல்ல உழவன்? (Why Choose Us?)

100% நஞ்சில்லா உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம், நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்கிறோம், அதேசமயம் உழவர்களுக்கு நேரடி ஆதரவையும் வழங்குகின்றோம். நாட்டு மரபு உணவுப் பொருட்களை பாதுகாக்கும் இந்த முயற்சி, பாரம்பரிய விவசாய முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்க உதவுகிறது. இயற்கை வழியில் விளைவிக்கும் உணவுகளின் மகத்துவத்தையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் அதிகரிக்கும் விதமாக, நாம் சுற்றுச்சூழல் நட்பான விவசாயத்தை ஊக்குவிக்க செயற்படுகிறோம்.

வாடிக்கையாளர் மதிப்புரைகள்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் எங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்த எங்களுக்குத் உதவுங்கள்.

சமீபத்திய வலைப்பதிவுகள்

புதிய தகவல்கள் மற்றும் பயனுள்ள குறிப்புகளை உங்கள் உடன் பகிர்வதற்கான இடம்.